NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜூன் மாதம் இடம்பெறப்போகும் சர்வதேச கைத்தொழில் கண்காட்சி (Industry EXPO 2024)

சர்வதேச கைத்தொழில் கண்காட்சி “Industry EXPO 2024” ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறும் என்றும், அதன் திறப்பு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் என்றும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

நிலைபேறான பசுமைக் கைத்தொழில் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான முதலாவது சர்வதேச மாநாடு மற்றும் “Industry Green Awards” விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பதிரண இதனைத் தெரிவித்தார்

Share:

Related Articles