NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜூலை 26இல் தொடங்குகிறது ஒலிம்பிக் பெருவிழா!

அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க இன்னும் 100 நாட்களே உள்ளன. 

~கேம்ஸ் வைட் ஓபன்| – இந்த விளையாட்டு களம் அனைவருக்குமானதென தொடங்கவுள்ளன ஒலிம்பிக் தொடர் இம்முறை பிரான்ஸ் தலைநகர் பரிஸில் நடைபெறவுள்ளது. 

எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி தொடங்கும் போட்டிகள் ஓகஸ்ட் 11ஆம் திகதி வரை ரசிகர்களுக்கு விருந்தையும், வீரர்களுக்கு விருதையும் வழங்கவுள்ளன. 

இதன் தொடக்க விழா நிகழ்வுகள் ஈபிள் டவருக்கு அருகேயுள்ள சாம்ப்-டி-மார்ஸ் கார்டன் பகுதியில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

133 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீர, வீராங்கனைகள் 320 போட்டிகள் அடங்கிய 32 பிரிவு விளையாட்டுகள் என்று 15 நாட்கள் பரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் களைகட்டவுள்ளன. 

வழக்கமாக ஒலிம்பிக் போட்டிகள் எந்த நாட்டில் நடைபெறுகிறதோ அந்நாட்டின் சிறப்பம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மஸ்கட் எனப்படும் ஒலிம்பிக் சின்னங்கள் அறிமுகப்படுத்தப்படும். 

அந்தவகையில் இம்முறை ஒலிம்பிக் போட்டியிலும் அப்படியொரு மஸ்கட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃப்ரிஜியன் தொப்பி தான் பரிஸ் ஒலிம்பிக் போட்டியின் மஸ்கட் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles