NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

டென்மார்க்கின் மன்னரானார் ஃபிரடெரிக் X

டென்மார்க்கின் அரச மன்னராக ஃபிரடெரிக் X முடிசூடப்பட்டுள்ளார்.

டென்மார்க் ராணி மார்கரெட் II தனது 83 வயதில் புத்தாண்டு தினத்தன்று உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார்.

900 ஆண்டுகால டென்மார்க் முடியாட்சி வரலாற்றில் ஒரு ஆட்சியாளர் தானாக முன்வந்து பதவி துறப்பது இதுவே முதல் முறை.

தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ராணி பதவி விலகல் ஆவணத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

பின்னர், பிரதம மந்திரி Mette Frederiksen அரண்மனை பார்வையாளர் கலரியில் இருந்து Frederick X அரசராக பதவியேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

புதிய அரசரின் பதவியேற்பை காண ஆயிரக்கணக்கான மக்கள் அரண்மனைக்கு வெளியே கூடியிருந்தனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles