NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தபால் தொழிற்சங்கங்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியினர் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (25) பிற்பகல் கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்க முடியாத வாழ்க்கைச் சுமைக்கு ஏற்றவாறு சம்பள உயர்வு உள்ளிட்ட தபால் ஊழியர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கோரி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

இந்தப் போராட்டத்துடன் நாடு முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள தபால் நிலையங்களை முற்றுகையிட்டு தொடர் போராட்டமும் நடத்தப்பட்டது.

Share:

Related Articles