NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழகம் – இலங்கைக்கான முதலாவது கப்பல் சேவை இன்று முதல் ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கைக்கான முதலாவது சர்வதேச பயணிகள் கப்பலை இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சர் சர்பானந்தா சோனோவா கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

இலங்கைக்கான முதல் சர்வதேச பயணக் கப்பலின் பயணம் இன்று (05) தமிழகத்தில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.

சென்னை கப்பல் முனையத்தில் மாலை 5.00 மணிக்கு இடம்பெறும் இந்நிகழ்வில் கார்டில்லியா குரூஸ் என்ற இலங்கைக்கான முதலாவது சர்வதேச கப்பலே தனது முதலாவது சேவையை தொடங்கவுள்ளது.

கார்டில்லியா குரூஸ் கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வரும்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை வரவேற்பார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles