NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தமிழ் மொழிக்கு புகழாரம் சூட்டிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தமிழ் மொழிதான் இந்த உலகின் தொன்மையான மொழி என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மூன்று நாடுகளுகடகான உத்தியோகப்பூர்வ விஜய்தை மேற்கொண்ட பின்னர் இன்று காலை இந்தியா திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி விமான நிலையத்தில் வைத்து உரையாற்றுகையில், தமிழ் மொழிதான் இந்த உலகின் தொன்மையான மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி எனத் தெரிவித்தார்.

‘நான் வெளிநாடுகளில் நம் தேசத்தின் கலாசாரம் பற்றிப் பேசும்போது இந்த உலகின் கண்களை உற்று நோக்குகிறேன். இந்த நம்பிக்கை எனக்கு வரக்காரணம் இங்கே அமைந்துள்ள பெரும்பான்மை பலமிக்க ஆட்சி. இந்த உலகம் இப்போதெல்லாம் இந்தியா என்ன சிந்திக்கிறது என்பதை அறிய ஆர்வமுடன் இருக்கிறது.

தடுப்பூசியை உலக நாடுகளுக்கு அளித்தது பற்றி வெளிநாட்டில் எனக்கு கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது நான் அவர்களிடம் இது புத்தரின் மண். நாங்கள் எதிரிகளையும் அக்கறையுடன் நடத்துவோம் என்றேன்.

தமிழ் மொழி நம் மொழி. அது ஒவ்வொரு இந்தியரின் மொழி. உலகின் தொன்மையான மொழி, தமிழ் மொழி. அந்த மொழி தந்த திருக்குறளை பப்புவா நியூ கின நாட்டில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்த்துள்ளனர். அதை வெளியிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அது எனக்கு மகிழ்ச்சி அளித்தது’ என்றார்.

Share:

Related Articles