ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தி, அக்கட்சியால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்படுமா இல்லையா என்பது குறித்த தீர்மானம் இன்று (08)அறிவிக்கப்படும் என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தயாசிறி ஜயசேகரவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிமன்றம், அவருடைய மனு மீதான தீர்மானம் குறித்து இன்று அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கு எதிராக தயாசிறி ஜயசேகர நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார்.
மேலும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளராக செயல்பட்ட தயாசிறி ஜயசேகரவின் பதவி நீக்கப்பட்டு கட்சி உறுப்புரிமையும் நீக்கப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.