விமானங்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் விமானங்கள் தாமதமாகி வருவதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 7 விமானங்களை வாங்குவதற்கு அரசாங்கத்திடம் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றைப் பெறுவதற்கு நிதிப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் நேற்று (27) கூறியுள்ளார்.
மேலும், நேற்றைய தினம் 7 விமானங்களில் தாமதம் ஏற்பட்டதாகவும், ஆனால் இரத்து செய்யப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
26 ஆம் திகதி 3 விமானங்கள் இரத்து செய்யப்படுவதாக பயணிகளுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு 27 விமானங்கள் தேவைப்படும் பட்சத்தில், தற்போது 20 விமானங்கள் மட்டுமே உள்ளதாக விமான நிலைய சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.