NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

திடீரென இரத்தான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் – 100 பயணிகள் வீடு திரும்பினர்!

கொரியாவில் வேலைக்குச் செல்லவிருந்த 100 இலங்கைத் தொழிலாளர்களுக்கு முன்பதிவு செய்த ஸ்ரீலங்கன் விமானம் தாமதமாக இரத்து செய்யப்பட்டதால் அவர்களது வேலைக் கனவுகள் கலைந்து அவர்கள் வீடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. 

 இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டில் இந்த 100 பணியாளர்களும் நேற்று முன்தினம் இரவு கொரியாவுக்குச் செல்லவிருந்தனர்.

விமானம் திடீரென தாமதமானதால் விமான நிலையத்தில் கடும் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டு இறுதியாக விமானம் ரத்து செய்யப்பட்டதால் அனைவரும் திரும்பிச் சென்றுள்ளனர்.

இக்குழுவினரை குறித்த நேரத்தில் அனுப்ப முடியாத காரணத்தினால், எதிர்வரும் 3ஆம் திகதி வரை இந்தக் குழுவை கொரியாவுக்கு அனுப்ப வேண்டாம் என கொரியாவின் மனிதவள திணைக்களம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறிவித்துள்ளது.

100 பேர் கொண்ட குழுவில் 6 பேர் கொரியாவுக்கு திரும்ப அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வட்டாரங்கள் தெரிவித்தன.

Share:

Related Articles