ஜப்பான் – ஒகினாவா மாகாணத்தில் உள்ள நாகோ நகர நதி, திடீரென சிவப்பு நிறமாக மாறியுள்ளது.
மதுபான ஆலையில் உள்ள குளிரூட்டும் அமைப்பு ஒன்றில் இருந்து உணவில் நிறத்திற்காகச் சேர்க்கப்படும் சாயம் கசிந்ததால் நதியின் நிறம் மாறியதாகத் தெரியவந்துள்ளது.
மதுபான தயாரிப்பு ஆலையான ஓரியன் ப்ரூவரிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உணவுகளில் நிறத்திற்காகச் சேர்க்கப்படும் சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீர் நிறம் மாறியதாகவும், இதனால் சுகாதார அபாயங்கள் எதுவும் இல்லை என்றும், அத்துடன் மிக பெரிய பிரச்சினை மற்றும் கவலையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பும் கோரியுள்ளது.
மேலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் உறுதியளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.