NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தினேஷ் ஷாப்டரின் புதைக்கப்பட்ட சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொலை செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் புதைக்கப்பட்ட சடலம் இன்று (25) நீதிமன்ற உத்தரவின்படி தோண்டி எடுக்கப்படவுள்ளது.

சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் ஆயுதமேந்திய பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசேட வைத்திய நிபுணர்கள் குழு, ஷாப்டரின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய அவரது சடலத்தை தோண்டி எடுக்க வேண்டும் என நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில், குறித்த சமர்ப்பணத்தை ஆராய்ந்த கொழும்பு நீதிவான் நீதிமன்றம், ஷாப்டரின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து, நீதிவான், நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் முன்னிலையில், வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் சடலம் இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.

Share:

Related Articles