திருப்பதி திருமலை கோயிலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று (27) காலை வழிபாடு செய்துள்ளார்.
ஹைதரபாத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (26) தெலங்கானா மாநிலத்திற்கு வருகை தந்துள்ளார்.
ஹைதராபாத் அருகேவுள்ள கன்ஹா சாந்தி வனம் எனும் சூழலியல் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, ஆந்திர மாநிலம் திருப்பதி சென்ற பிரதமர் மோடியை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட பலர் வரவேற்றதனைத் தொடர்ந்து சாலைமார்க்கமாக சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று (27) காலை திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் சிறப்பு வழிபாடு செய்த அவருக்கு கோயிலில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, 140 கோடி இந்திய மக்களின் நலனுக்கான திருப்பதி ஸ்ரீ வெங்கடாசலபதியிடம் பிரார்த்தனை செய்ததாகப் பதிவிட்டுள்ளார்.