(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
காதலியை திருமணம் செய்ய மறுத்த இளைஞர் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பில் பின்வத்த பொலிஸாரால் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் பாணந்துறை – பின்வத்தை, அலுபோமுல்ல வீதியில் வைத்து குறித்த இளைஞனை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் காதலித்த இளைஞன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இந்த கடத்தல் சம்பவத்தை திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடத்தப்பட்ட இளைஞனின் தாயாரும், பிறிதொரு நபரும் செய்த முறைப்பாட்டிற்கு அமைய வாத்துவ பிரதேசத்தில் வசிக்கும் காதலி உட்பட 4 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் இளைஞனை அருகில் உள்ள ஒரு கைவிடப்பட்ட வீட்டிற்கு அழைத்துச் சென்ற பின்னர் விடுவித்துள்ளதாக விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.