NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தென்னாபிரிக்காவில் தங்க சுரங்கத்தில் சிக்கி 78 தொழிலாளர்கள் பலி!

தென்னாபிரிக்காவில் சட்டவிரோதமாக  சுரங்கம் தோண்டியதில்  அரசாங்கத்துடன் மோதலில் ஈடுபட்டு, கடந்த இரு மாதங்களாக  சுரங்கத்தில் சிக்கித்  தவித்த 78 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

 தென்னாபிரிக்காவின் ஸ்டில்போன்டைன் நகர் அருகே சட்டவிரோதமாக தங்கச் சுரங்கம் தோண்டும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அவர்களை சரணடையுமாறு பொலிஸார்  வலியுறுத்தி வந்தனர். ஆனால் தொழிலாளர்கள் சரணடைய மறுத்து அரசாங்கத்துடன் மோதல் போக்கை கடைப்பிடித்தனர்.

இதைத்  தொடர்ந்து அவர்கள் தங்கச் சுரங்கத்தில் இருந்து வெளியேற மறுத்தனர். இவ்வாறு கடந்த இரு மாதங்களாக சுரங்கத்தில் சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களை வெளியேற்ற அரசாங்கம்  முடிவு செய்தது. இதனால் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப்  பொருட்கள் நிறுத்தப்பட்டன.

அதைத்  தொடர்ந்து 2 கி.மீ., ஆழ சுரங்கத்திலுள்ள தொழிலாளர்கள் வெளியேற உதவும் கயிறு மற்றும் கம்பிகளை அரசாங்கம் அகற்றியது. இதனால் உணவின்றியும், நீரின்றியும் கடந்த இரு மாதங்களாக தவித்த 78 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 160 பேர் மேலே வரமுடியாமல் தவிக்கின்றனர். இதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.மேலும் சில தொழிலாளர்கள் வரமறுத்து சுரங்கத்திலேயே தங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மக்கள் பிரதி நிதிக்குழு ஒன்று அரசாங்கத்தைக்  குற்றம்சாட்டியுள்ளது. அரசாங்கம்  ஒரு வாரத்துக்கும் மேலாக மீட்புப்பணியை மேற்கொள்ள மறுத்ததே சுரங்கத் தொழிலாளர்கள் இறப்புக்கும் உடலில் நீரிழப்புக்கும் காரணம் என தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles