தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு லொறியுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் லொறியின் சாரதி ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலனிகம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு லொறிகளும் கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற லொறி 3.9 கிலோமீற்றர் பகுதியில் சத்தம் கேட்டு வீதி ஓரத்தில் நிறுத்த முயற்சித்த போது பின்னால் பயணித்த மேலும் ஒரு லொறி அதன் மீது மோதியுள்ளது.
லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.