NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு…!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன் குறிப்பிட்ட காலவரையறுக்குள், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும். இதற்கான நிதி, 2025 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளதுடன் தேவையான சந்தர்ப்பங்களில்  தேர்தல் ஆணைக்குழுவுடன் அரசாங்கம் இணைந்து  செயற்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles