NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நடிகர் விஜயின் இலங்கை விஜயம் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெளியிட்டுள்ள தகவல்

தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜயின் இலங்கை விஜயத்தின் மூலமாக நாட்டின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சியடையுமென என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான இளையதளபதி விஜய் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய படமொன்றிற்கான படப்பிடிப்பை மேற்கொள்வதற்காகவே விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.

இந்நிலையில் விஜயின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்த சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, ‘இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க விசேட குழுவொன்றை நியமித்து தென்னிந்திய மற்றும் பாலிவுட் திரைப்படங்களுக்கு இலங்கையில் படிப்பிடிப்புகளை நடத்துமாறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.

எதிர்காலத்தில் பல இந்திய நடிகர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். குறிப்பாக விஜய், சல்மான் கான் உட்படப் பலர் படப்பிடிப்புகளை நடத்த வருகை தர உள்ளனர்.

இவர்கள் தமது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை இட்டால் அது பல மில்லியன் கணக்கான மக்களைச் சென்றடைகிறது. பிரபுதேவா உட்பட பலர் இலங்கைக்கு வந்து சென்றுள்ளனர்.

இந்நிலையில்,  இலங்கையின் சுற்றுலாத்துறை பல்வேறு வழிகளில் எதிர்காலத்தில் ஊக்கமடையும். அதேபோன்று படிப்பிடிப்புகளை நடத்துவதற்கு இலகுவான அனுமதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles