இந்தியாவின் – ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே நேற்று மீனவர்கள் 11 பேர் கடலில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
நடுக்கடலுக்கு சென்ற மீனவர்கள் சமையல் செய்வதற்காக தங்களது சமையல் எரிவாயு கொள்கலன் அடுப்பை பற்ற வைத்துள்ளனர்.
அப்போது சமையல் எரிவாயு கொள்கலனில் இருந்து எரிவாயு கசிவு ஏற்பட்டு திடீரென படகு தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்து மீனவர்கள் கடலோர பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.
கடலோர பொலிஸார் விரைந்து வந்து படகில் இருந்த 11 மீனவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர்.
பின்னர் படகு முழுவதும் தீயில் கருகி கடலில் மூழ்கியது.
படகில் இருந்த 11 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.