(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கை பிரத்தியேக டிஜிட்டல் அடையாள திட்டத்திற்கான இந்திய – இலங்கை கூட்டுத் திட்டத்தின் கொள்முதல் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அறிவித்துள்ளார்.
28.03.2022 அன்று இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு, இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டத்திற்கான இந்திய – இலங்கை கூட்டு திட்ட கண்காணிப்பு குழு அறிமுகப்படுத்தப்பட்டது.
இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள திட்டத்திற்கான மென்பொருள் மேம்பாட்டை இந்திய அரசாங்கம் மேற்பார்வையிட்டு வருகிறது.
இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் இந்திய ரூபாவை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதன் விளைவாக, இலங்கையின் முழு மேற்பார்வை மற்றும் ஆலோசனையுடன் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் பிரதான தானியங்கி பயோமெட்ரிக் அமைப்புகள் மற்றும் பிற மென்பொருள் அமைப்புகள் நிறுவப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.