NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைவு!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரம் இன்று குறைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி மையத்தின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று (05) காலை 8:00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் காற்றின் தர சுட்டெண் மட்டம் கண்டி, கேகாலை, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாந்தோட்டை மற்றும் பொலன்னறுவை ஆகிய இடங்களில் மிதமான மட்டத்தில் இருந்தது.

கொழும்பு உட்பட ஏனைய நகரங்களில் காற்றின் தரம் நன்றாக இருப்பதாக தேசிய கட்டட ஆராய்ச்சி அமைப்பின் சுற்றாடல் ஆய்வுகள் மற்றும் சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது.

Share:

Related Articles