NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நாட்டிலுள்ள 60% பாடசாலைகளில் டெங்கு அபாயம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

தற்போது நிலவும் மழையுடனான காலநிலையுடன் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டிலுள்ள 60 சதவீதம் பாடசாலைகளில் டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்படுவதாக அந்த பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் 65 சதவீதம் மற்றும் கம்பஹா மாவட்டத்தில் 65-70 சதவீதமான பாடசாலைகளில் இவ்வாறான நுளம்புகள் காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பூச்சியியல் நிபுணர் சதீர மாரசிங்க தெரிவித்துள்ளார்.

பாடசாலைகளுக்கு அருகாமையில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அழிப்பதில் விசேட கவனம் செலுத்துமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்காலப்பகுதியில் நாட்டில் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மொத்த எண்ணிக்கை 34,480 ஆகும்.

மேல் மாகாணத்தில் மாத்திரம் 17,020 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles