(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தொம்பே – மலிந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடற்படைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் லொறியின் சாரதி உட்பட 3 பேர் பயணித்துள்ளதுடன், சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த ஏனைய இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை பிரதேசத்தை சேர்ந்த இருவர் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய கடற்படை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பொல்கஹவெல, வெலிகம, ஈச்சங்குளம் மற்றும் தங்கொடுவ பிரதேசங்களில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 12 வயதுடைய பாடசாலை மாணவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.
தியத்தலாவ கஹகொல்ல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 9 பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.