சின்னமுத்து அம்மை நோய்க்கான தடுப்பு வாரம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்போது, மீண்டும் சின்னமுத்து அம்மை நோய் பரவாமல் அதனைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு, விசேட தடுப்பூசி செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.