விசேட தேவையுடையோர், வயதானோர் மற்றும் நாட்பட்ட நோயினால் பாதிக்கப்பட்ட பிரிவினர்களுக்கு பெற்றுக்கொடுக்கப்படும் நிவாரண பட்டியல், எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படுமென சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளாா்.
நிவாரணம் பெருவோரின் பெயர் பட்டியல் தொடர்பில் இதுவரையில் மேன்முறையீடு அல்லது முறைப்பாடு செய்யப்படவில்லை என்றால், எதி்ர்வரும் காலங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
இதேவேளை, மேன்முறையீட்டு செயற்பாடுகளினூடாக திருப்தி கிடைக்கவில்லை என்று கருதும் பட்சத்தில், மேன்முறையீட்டு பத்திரத்தின் பிரதியொன்றை ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு ஜனாதிபதி செயலக தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளாா்.