NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீண்டகாலமாக இருக்கும் தொடர் மாடி குடியிருப்புக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு உட்பட பல இடங்களில் நீண்டகாலமாக இருக்கும் தொடர் மாடி குடியிருப்புக்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 40 வருடத்திற்கு மேற்பட்ட அனைத்து மாடி வீடுகளிலும் வசிப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான விசேட திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்த புதுப்பித்தல் வேலைத்திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படி சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளின் தரம் குறித்த தொழில்நுட்ப அறிக்கையை அங்கீகாரம் பெற்ற நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும் என பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுபோன்ற கட்டடங்கள் குறித்து தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அல்லது வேறு அரசு நிறுவனம் மூலம் ஆய்வு நடத்தி முறையான தொழில்நுட்ப அறிக்கையை பெறுவது சிறந்தது என அமைச்சின் செயலாளர் டி.எஸ்.சத்யானந்த தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles