NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நீண்ட நாக்கு கொண்ட நாய் என கின்னஸ் சாதனை படைத்த ஜோயி !

அமெரிக்காவில் லூசியானாவை சேர்ந்த ஜோயி என பெயரிடப்பட்ட லாப்ரடோர்- ஜெர்மன் ஷெப்பர்ட் கலவை கொண்ட நாய், மிக நீளமான நாக்கு கொண்ட நாய் என கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

இந்த நாய் 12.7 சென்டி மீட்டர் நீளம் (5 அங்குலம்) கொண்ட நாக்கைக் கொண்டுள்ளது.

கால்நடை மருத்துவர் ஒருவர் குறித்த நாயின் நாக்கு நீளத்தை அளந்ததை தொடர்ந்து இந்த சாதனை கண்ணடறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நீளமான நாக்கு கொண்டதாக சாதனை பட்டியலில் இருந்த பிஸ்பீ என்ற நாயின் நாக்கு 9.49 சென்டி மீட்டர் இருந்த நிலையில், தற்போது அந்த சாதனையை ஜோயி முறியடித்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles