NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

நைஜர் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணவேண்டும் : போப் பிரான்சிஸ் வலியுறுத்தல்

அணு ஆயுத உலைகளுக்கு தேவைப்படும் மூலப்பொருளான யுரேனிய வளம் அதிகம் உள்ள நைஜர் நாட்டின் அதிபராக முகமது பசோம் என்பவர் பதவி வகித்து வந்தார்.

பாதுகாப்பின்மை, பொருளாதார நலிவு உள்ளிட்டவைகளை காரணம் காட்டி கடந்த ஜூலை 26 ஆம் திகதி இராணுவ கிளர்ச்சியில் அங்கு அதிகார மாற்றம் ஏற்பட்டது.
இதில் இந்நாட்டு ஜனாதிபதி பசோம் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக அநடநாட்டு செய்திகள் வெளியாகின.

மேலும் ஜனாதிபதி பசோம் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் தலைநகரில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நைஜரில் இராணுவ ஆட்சியைக் கொண்டு வந்ததாக அந்நாட்டு இராணுவம் அரசு தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தது. இராணுவத்தின் இந்தச் செயலுக்கு ஐ.நா. சபை மற்றும் சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.

இதற்கிடையே, நைஜரின் புதிய இராணுவ ஆட்சிக்கும், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார கூட்டமைப்பான எகோவாஸ் பிரதிநிதிகளுக்கும் இடையே கடந்த வார இறுதியில் நடந்த பேச்சுக்கள் சிறிதளவு முன்னேற்றத்தை அளித்துள்ளது என கூறப்படுகிறது.

இந்நிலையில், மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரில் இராணுவ புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்பட வேண்டும் என போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.

மேலும், அனைவரின் நலனுக்காகவும் கூடிய விரைவில் அமைதியான தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles