NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்த தந்தை !

கின்னஸ் சாதனைக்காக பல்வேறு வகைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து சாதனை படைப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இங்கிலாந்தை சேர்ந்த ஒருவர் தனது மகளின் பெயரை உடலில் 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

மார்க் ஓவன் எவன்ஸ் என்ற 49 வயதான இவர் ஏற்கனவே தனது மகளின் பெயரான லூசி என்பதனை 267 முறை பச்சை குத்தி கடந்த 2017ஆம் ஆண்டு சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த டீட்ரா விஜில் என்பவர் தனது பெயரை உடலில் 300 முறை பச்சை குத்தி மார்க் ஓவன் எவன்ஸ்சின் சாதனையை முறியடித்தார்

இதைத்தொடர்ந்து எவன்ஸ் விஜிலின் சாதனையை முறியடித்து மீண்டும் சாதனை படைக்க திட்டமிட்டார்.

அதன்படி கின்னஸ் சாதனை அமைப்புக்கு தகவல் தெரிவித்து, 2 டாட்டூ கலைஞர்கள் மூலம் தனது உடலின் முழுப்பகுதியிலும் மகளின் பெயரை 667 முறை பச்சை குத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Share:

Related Articles