பதுளை பஸ் விபத்தில் சிக்கி காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவன் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
ஜா – எல அலெக்சாண்டர் மாவத்தை பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவனே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.