NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திரும்பப்பெற கோரி வட-கிழக்கில் போராட்டங்கள்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட-கிழக்கு பெண்கள் அமைப்பு உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் கடந்த சில நாட்களாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வட-கிழக்கு பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலர் அதில் கலந்துகொண்டனர்.

அத்துடன், வவுனியா மகிழங்குளம் முனி அப்பர் இந்து ஆலய முன்றலில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அரசாங்கம் உடனடியாக திரும்பப் பெறுமாறு கோரி வவுனியா பெண்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, மன்னார் நகர பஸ் நிலையத்திற்கு அருகில் மன்னார் வட-கிழக்கு பெண்கள் ஒன்றியத்தைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

Share:

Related Articles