ஒரு லீற்றர் டீசலின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாதென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
விலைச் சூத்திரத்தின் பிரகாரம் பஸ் கட்டணத் திருத்தம் அமுல்படுத்தப்படுமெனத் தெரிவித்த விஜேரத்ன, விலைத் திருத்தத்திற்கு 4 வீதமான சூத்திரத்தின் தாக்கம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
10 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டமை விலை சூத்திரத்தில் 4 வீத பாதிப்பை கூட ஏற்படுத்தாது எனவே கட்டண திருத்தம் எதுவும் இல்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.