NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் கட்டண திருத்தம் உரிய முறையில் அமுல்படுத்தப்படுவது குறித்து
பரிசோதனை!

எரிபொருள் விலை குறைப்புடன் மேற்கொள்ளப்பட்ட பஸ் கட்டண திருத்தம் உரிய முறையில் அமுல்படுத்தப்படுமா? என்பது தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

திருத்தப்பட்ட கட்டணத்தை வசூலிக்காத பஸ்கள் தொடர்பில் 1955 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும் என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரெண்டா தெரிவித்தார்.

புத்தாண்டு காலத்தில் திருத்தப்பட்ட பஸ் கட்டணங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை சரிபார்க்க நடமாடும் பரிசோதகர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Share:

Related Articles