NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பஸ் விபத்து – பாடசாலை மாணவர் உட்பட 15 பேர் காயம்!

வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் 7 பேர் மற்றும் சாரதி உட்பட 15 பேர் காயமடைந்த நிலையில், வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாரதியின் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றன.

இந்த நிலையில், விபத்து தொடர்பில் வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles