NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலைச் சென்ற சிறுமியை கடத்த முயற்சித்த இருவர்…!

பண்டாரவளை பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த 10 வயது சிறுமி ஒருவரை கடத்த முயற்சித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பண்டாரவளை, மகுலெல்ல, வனசிரிகம பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் நேற்று காலை 6.50 மணியளவில் பாடசாலைக்குச் செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார்.

அவ்வாறு சென்றுக் கொண்டிருந்த போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் தன்னை வலுக்கட்டாயமாக முச்சக்கரவண்டிக்கு ஏற்றிச் சென்றதாகவும், குறித்த இருவரும் தன்னை முச்சக்கர வண்டியில் ஏற்றிய பின்னர் ஒரு வித பானத்தை குடிக்க கொடுத்ததாக கடத்தப்பட்ட சிறுமி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

அது கசப்பாக இருந்த நிலையில், வௌியில் துப்பிவிட்டு முச்சக்கரவண்டியில் இருந்து தப்பிச்சென்று, பாடசாலை வகுப்பறையில் அழுதுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ​​வகுப்பு ஆசிரியர் இது குறித்து வினவியுள்ளார்.

பின்னர் அதிபர் ஆசிரியர் ஒருவருடன், சம்பந்தப்பட்ட சிறுமியை பண்டாரவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மகளிர் பணியகம் தற்போது மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share:

Related Articles