NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாரவூர்தியும் பஸ் ஒன்றும் மோதி விபத்து – 14 பேர் பலி

மேற்கு உக்ரைனில் எரிபொருளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும், சிறிய பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

எதிர்திசையில் இருந்து வந்த வாகனங்கள் வரிசையை நோக்கி பாரவூர்தி செலுத்தப்பட்டதால் குறித்த விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சாரதிகள் உள்ளிட்ட இரண்டு வாகனங்களில் பயணித்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் குற்ற வழக்கினை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles