பாராளுமன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறினால் அவர்கள் மூன்று ஆண்டுகளுக்குத் தேர்தல் உரிமையை இழக்க நேரிடும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாராளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பிரசார ஆரம்பத்திலிருந்து அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் வாக்காளர்களுக்காக செலவிடக் கூடிய அதிகபட்ச நிதி தொடர்பிலான அறிக்கை வைத்திருக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறியுள்ளார்.