NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாலம் உடைந்து விழும் அபாயம்.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாஃபி நகர் பகுதியில் உள்ள வெள்ளனாவல் பாலம் 200 மீற்றர் நீளம் உடையது. இந்த பாலம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சேதமடையத் தொடங்கியதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் சேதமடைந்து வரும் பாலத்தின் ஒரு தளமும் இடிந்து விழுந்துள்ளது. சட்டவிரோத மணல் அகழ்வே இதற்கு காரணம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Share:

Related Articles