NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த ஆர்மீனியா.

பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் கடந்த 9 மாதமாக நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 37 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான மோதலை தீர்க்க பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதே தீர்வாகும் என ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தீனம் ஒரு நாடாக செயல்படுவதற்கான தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்திருந்தாக ஆர்மீனியாவின் வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டிஉள்ளது.

மேலும், அயர்லாந்து, ஸ்பெயின், நோர்வே ஆகியவை பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்துள்ளன.

Share:

Related Articles