அம்பேபுஸ்ஸ – மீரிகம புகையிரத நிலையங்களுக்கு இடையிலேயே குறித்த புகையிரதம் செயலிழந்துள்ளதால் பிரதான மார்க்கமூடான புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொழில் நுட்ப கோளாறு காரணமாக புகையிரத ஒன்று செயலிழந்தமையினால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் புகையிரத சேவையினை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.