NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரான்ஸிஸ் வலுப்பெறும் வன்முறை – மேயர் வீட்டின் மீதும் தாக்குதல்!

பிரான்ஸ் நாட்டின் சிறுவன் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், அரசாங்கத்திற்கு எதிராக பாரிஸ் உட்பட எண்ணற்ற புறநகர் பகுதிகளில் மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

வன்முறை பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில் 45 ஆயிரம் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தலைநகர் பாரிஸில் உள்ள நகரம் ஒன்றின் மேயரான வின்சென்ட் ஜீன்பிரன் என்பவர் அவரது ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், 

அவரது வீடு மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கும்பலாக சென்று தாக்குதல் நடத்தியுள்ளனர். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் தீங்கு ஏற்படுத்தும் நோக்கில் தாக்குதல் நடந்துள்ளது. 

அவருடய வீடு மீது அந்த கும்பல் கார் ஒன்றை கொண்டு மோத செய்துள்ளது. அதன்பின்னரும் ஆத்திரம் தீராமல், வீட்டில் அவரது குடும்பத்தினர் தூங்கி கொண்டிருந்தபோது தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவத்தில், அவரது மனைவி மற்றும் குழந்தைகள் காயமடைந்துள்ளனர். இது பேசி விவரிக்க முடியாத ஒரு கோழைத்தன கொலை முயற்சி என்று அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles