பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தடை செய்ய பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
புகைத்தலால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரித்தானிய அரசாங்கத்தின் குறித்த தீர்மானத்திற்கு சுகாதாரத்துறை பாராட்டு தெரிவித்துள்ளது.
மேலும் பல தரப்பினர் இதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.