NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பில்கேட்ஸ் இந்தியாவுக்கு விஜயம்!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள வேளாண் ஆராய்ச்சி மையத்தை அவர் பார்வையிடவுள்ளார். இதற்கு ‘கிருஷி பிரகிஷ்ய கேந்திரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. விவசாயிகளின் வளர்ச்சிக்கு இந்த மையம் எப்படி பயனுள்ளதாக இருக்கும் என்பதை அவர் அறிந்து கொண்டுஇ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இவரது வருகைக்காக சிவப்பு கம்பள வரவேற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்னைக்கையும் சந்திக்கவுள்ளார்.

Share:

Related Articles