கொள்ளுப்பிட்டிய நிலையத்துக்கு அருகில் புகையிரதமொன்று தடம் புரண்டமையால், கரையோர புகையிரதங்கள் மார்க்கத்தில் புகையிரதங்கள் தனி வழியாக்கப்பட்டுள்ளன.
ஆகையால், கரையோர புகையிரதங்கள் மார்க்கத்தின் ஊடாக கொழும்பில் இருந்து வெளியேறும் பயணிகள் மாற்று போக்குவரத்துச் சேவையை பயன்படுத்துமாறு, புகையிரத பொது முகாமையாளர்( செயற்பாடுகள்) டீ.எஸ் பொல்வத்தகே தெரிவித்தார்.
தனி வழியில் புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதால், கொழும்புக்குள் நுழையும் புகையிரதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த நிலைமையால், கரையோர புகையிரதங்கள் மார்க்கத்தில் புகையிரதங்கள் சில இரத்துச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் சேவையில் ஈடுபடுத்தப்படும் புகையிரதங்கள் பல மணிநேரம் தாமதமாகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.