NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புகையிரத நேர அட்டவணையில் மாற்றம்!

கரையோரப் மார்க்கத்தின் புகையிரத சேவை நேர அட்டவணையை இன்று (01) முதல் திருத்தியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்த ரு{ஹணு குமாரி புகையிரத இன்று அதிகாலை 5.25 மணியளவில் பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்தது.

இதுவரை வார நாட்களில் மட்டும் இயங்கி வந்த சகாரிகா கடுகதி புகையிரத சேவை, சனிக்கிழமைகளிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் வார நாட்களில் இரவு 8.35 மணிக்கு மரதானையில் இருந்து தெற்கு பயாகலை வரை இயக்கப்படும் புகையிரத இன்று முதல் அளுத்கம வரை நீடிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரதானையில் இருந்து அளுத்கம வரை பிற்பகல் 2 மணிக்கு இயக்கப்படும் புகையிரத இன்று முதல் பிற்பகல் 1.55 மணிக்கு மரதானையில் இருந்து அளுத்கம வரை இயக்கப்பவுடள்ளது.


இந்த புகையிரத நேர அட்டவணை திருத்தம் தொடர்பில் இரண்டு வாரங்கள் பரிசோதிக்கப்பட்ட பின்னர், தொடர் நடவடிக்கையை நடைமுறைப்படுத்துவதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என புகையிரத பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.

Share:

Related Articles