NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புதிய அதிவேக UFS 4.0 Storeage தொழில்நுட்பம் – விரைவில் Smartphone பயனர்களுக்குக் கிடைக்கும்!

Storeage சார்ந்த தயாரிப்புகளை மேற்கொள்ளும் Micron நிறுவனம், தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், புதிய அதிவேக UFS 4.0 Storeage தொழில்நுட்பம், விரைவில் ஸ்மார்ட்போன் பயனர்களுக்குக் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

UFS 4.0 தொழில்நுட்பத்தால் விரைவாக கோப்புகளை பகிரவும், நிறுவவும் முடியும். இது பல காம்பேக்ட் கேட்ஜெட்டுகளை திறன் உள்ளதாக மாற்றும். பொதுவாக ஸ்மார்ட்போன்கள், DSLR கேமராக்கள் போன்றவற்றில் இந்த அதிவேக கோப்பு பகிர்மான தொழில்நுட்பம் இருந்தால், அவற்றின் தரமும் சிறப்பானதாக இருக்கும்.

இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், பெரிய அளவு புகைப்படம், அல்லது வீடியோவை படம்பிடிக்கும்போது, அதனை Storage Memoryயில் உடனடியாக நிறுவ, வன்பொருளான பிராசஸர் கட்டளையிடும். இப்போது குறைந்த திறன் கொண்ட ஸ்டோரேஜுகள் தெளிவான படங்களை தக்கவைத்துக்கொள்ள திணறுகிறது. இந்த நிலை அதிவேக ஃபிளாஷ் ஸ்டோரேஜ் காலங்களில் மாறும் என்பது தான் தவிர்க்க முடியாத உண்மை.

சில ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு புதிய UFS 4.0 தொழில்நுட்பத்திலான ஸ்டோரேஜ் சிப்களை மைக்ரான் அனுப்பிவைத்துள்ளது. இந்த புதிய சிப்கள் பிளாக்‌ஷிப் பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் விரைவில் காணலாம் என நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மைக்ரான் நிறுவனம் 256GB, 512GB, 1TB ஸ்டோரேஜ் சிப்களை மட்டுமே உற்பத்தி செய்கிறது.

மைக்ரான் தற்போது ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுக்கு தகுதி மாதிரிகளை அனுப்பியுள்ளது. அவை வேகம், நம்பகத்தன்மை, அதிர்ச்சி மற்றும் தாக்க எதிர்ப்பு, பிழை விகிதங்கள், சேமிப்பகத்தின் தரத்தை நிர்ணயிக்கும் பிற அளவுருக்களுக்கான சோதனைக்கு உட்படுத்தப்படும்.

இந்த ஆண்டின் இரண்டாம் அரையாண்டின் இதன் உற்பத்தி அதிக அளவில் தொடங்கும் என்று மைக்ரான் உறுதிப்படுத்தியுள்ளது. எனவே, UFS 4.0 சிப்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சந்தைகளில் காணலாம் எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles