NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புது டெல்லியில் 8 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இந்திய தலைநகர் புது டெல்லி என்சிஆர் பகுதியில் உள்ள எட்டு பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று புதன்கிழமை அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டல்கள் அனைத்தும் மின்னஞ்சல்கள் மூலம் கிடைக்கப்பெற்றுள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மின்னஞ்சலின் IP முகவரி வெளிநாட்டைச் சேர்ந்தது என பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் VPN மூலம் IP முகவரியை மறைக்க முயற்சிக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த பாடசாலைகளுக்கு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதிகாரிகளும் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles