NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தளத்தில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி…!

புத்தளம் – முந்தல் பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க வீதியில் செல்லும் மின்கம்பியில் இருந்து மின்சாரம் பெற்று மின்விளக்கு பொருத்தச் சென்ற இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக முந்தலம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முந்தல் 60 ஏக்கர் கிராமத்தைச் சேர்நத 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வர்த்தகரின் வீட்டுக்கு முன்பாக உள்ள மின்கம்பத்தில் ஏணியின் உதவியுடன் விளக்கை பொருத்தும் போது, ​​ மின்சாரம் தாக்கி குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

Share:

Related Articles