NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்கள் பொதுவெளியில் மேலாடையின்றி குளிக்கலாம்!

பெர்லின் நகர அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு விரைவில் அனுமதிக்கப்படவிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெர்லின் நகர அதிகாரிகளின் அனுமதியைத் தொடர்ந்து பொது நீச்சல் குளங்களில் பெண்கள் மேலாடையின்றி நீந்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலாடையின்றி சூரிய குளியல் செய்ததற்காக பொது நீச்சல் குளத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதைத் தொடர்ந்து இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண் அளித்த முறைப்பாட்டில், நீச்சல் குளத்தில் ஆண்களைப்போலவே பெண்களும் மேலாடை இல்லாமல் குளிக்கலாம். ஆண்களுக்கு ஒரு நீதி பெண்களுக்கு ஒரு நீதியா? என அவர் முறையிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக தற்போது பல நாடுகள் தங்களின் எதிர்ப்புக்களை பதிவு செய்து வருவதையும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக கண்டறிய முடிகின்றது.

மேலும், கலாசார விழுமியங்களை கடைப்பிடிக்கும் நாடுகளில் இவ்வாறான விடயங்கள் முற்றிலும் தடைசெய்யப்பட்டதாகவே காணப்படுகின்றது. ஆகவே அவ்வாறான நாடுகள் மத்தியில் இருந்து எதிர்ப்புகள் கிழம்பியுள்ளன.

இவ்வாறான விடயங்கள் கலாச்சார சீர்கேட்டை உருவாக்கும் எனவும், எதிர்கால சந்ததியினரிடம் தவறான முன்னோட்டத்தை ஏற்படுத்தும் எனசும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஒரு மனிதரை நிர்வாணமாக பார்ப்பதால் உணர்வுகள் தூண்டப்படலாம், இதனால் சுய இன்பம் காண்போரின் எண்ணிக்கை அதிகரிக்கும், ஒருவரின் நிர்வாண அழகினால் அவரை அடைய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கலாம். இதனால் குடும்ப வன்முறைகள், பிரிவு ஆகியன கூட ஏற்படலாம்.

உறவில் ‘ஏமாற்றுதல்’ என்றால் என்ன என்பது குறித்துப் பெரும்பாலான மக்கள் பல வலுவான கருத்துகளைக் கொண்டுள்ளனர்.

வழக்கமான ஒருதார மணத்தைப் பின்பற்றும் தம்பதிகள் பொதுவாக மூன்றாம் தரப்பினருடனான எந்தவொரு பாலியல் தொடர்பையும் துரோகம் என்று கருதுகிறார்கள்.

ஆகவே, இவ்வாறான முடிவுகள் உறவுகளிடையே துரோகம் அதிகரிப்பதற்கு ஏதுவாக அமையும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

ஜெர்மன் மக்கள் பொதுவெளியில் நிர்வாணமாக இருப்பதை ஏன் விரும்புகிறார்கள் என்பது குறித்து பிபிசியின் டிராவலில் கிறிஸ்டின் ஆர்னெசன் ஆய்வு கட்டுரை ஒன்றை ஆரம்பத்தில் எழுதியுள்ளார்.

இதனடிப்படையில், “சுதந்திர உடல் கலாசாரம்” இயற்கையுடன் இணக்கத்தை ஊக்குவிக்கிறது. இன்று சில ஜெர்மனியர்கள் நிர்வாணமாக சூரியக் குளியலில் ஈடுபடுகிறார்கள். ஆடைகள் இன்றி விளையாடுகிறார்கள் என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து, “பெர்லினில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்த பிறகு, மத்திய மேற்கு அமெரிக்காவில் நான் வளர்ந்த இடத்தைவிட, ஜெர்மனியில் நிர்வாணத்தின் மீது இருக்கும் சாதாரண அணுகுமுறையை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொண்டேன்.

பிரதான அமெரிக்க கலாசாரத்தில் நிர்வாணம் பொதுவாக பாலியல் ரீதியானதாகக் கருதப்பட்டாலும், இங்கு ஜெர்மனியில் சில அன்றாட சூழ்நிலைகளிலேயே நிர்வாணமாக இருப்பது அசாதாரணமான விஷயமல்ல. நீராவிக் குளியலில், நீச்சல் குளங்களில் நிர்வாணமாக இருப்பதற்கு நான் பழகிவிட்டேன்.

பொதுவெளியில் நிர்வாணமாக மக்கள் இருப்பதை முதன்முதலில் பார்த்ததை ஒருபோதும் மறக்க முடியாது.

பெர்லினின் தெற்கு நியூகோல்ன் மாவட்டத்தில் உள்ள ஹசென்ஹெய்ட் என்ற பூங்கா வழியாக நடைபயிற்சி செல்லும்போது, பிரகாசமான வெயிலில் நிர்வாணமாக மக்கள் குவிந்திருந்ததை நான் முதன்முதலாகக் கண்டேன்.

பிறகு, நண்பர்களிடம் கேட்பது, கூகுள் தேடல் ஆகியவற்றுக்குப் பிறகு பூங்கா அல்லது கடற்கரையில் நிர்வாணமாக இருப்பது பெர்லினில் நடைமுறையில் இருக்கும் விஷயம் என்பதைத் தெரிந்துகொண்டேன்,” என்று குறிப்பிடுகிறார்.

ஜெர்மனியில் பொதுவெளியில் நிர்வாணமாக இருக்கும் பழக்கத்தை ஆராய்ந்தால் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரைக்கும் நீள்கிறது.

ஜெர்மனியில் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதன் மூலம் இயற்கை உலகில் இரண்டரக் கலப்பது, வரலாற்று ரீதியாக எதிர்ப்பு மற்றும் ஆசுவாசப்படுதல் ஆகிய இரண்டுக்குமான செயலாகக் கருதப்படுகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles