NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண் அதிகாரியை மழையில் நனைய விட்ட பாகிஸ்தான் பிரதமர் !

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாரீசில் நடைபெறும் 2 நாள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார்.
இந்நிலையில் அங்கு அங்கு மழை பெய்து கொண்டு இருந்தநிலையில் உடனே பெண் அதிகாரி, பிரதமர் வாகனத்தின் அருகே ஒருவர் குடையுடன் சென்றுள்ளார். காரில் இருந்து ஷெபாஸ் ஷெரீப் இறங்கியதும் அவருக்கு பெண் அதிகாரி குடையை பிடித்துள்ளார்.

அப்போது அந்த பெண் அதிகாரியிடம் பேசிய ஷெபாஸ் ஷெரீப் பின்னர் அதிகாரியிடம் இருந்து குடையை வாங்கி அவரே குடையை பிடித்தபடி நடந்து செல்வது போன்றும், இதனால் அந்த பெண் அதிகாரி மழையில் நனைந்து செல்வது போன்றும் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.


இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் அதிகாரியிடமிருந்து குடையை வாங்கிக்கொண்டு பயணித்தமைக்காக சிலர் பாராட்டி வரும் நிலையில் சிலர் குறித்த பெண் அதிகாரியை மழையில்
நனைய வைத்து சென்றமைக்காக கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

Share:

Related Articles