NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைக்காத பேக்கரிகளுக்கு எதிராக நடவடிக்கை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நேற்று (20) நள்ளிரவு முதல் ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், விலை குறைக்கப்பட்டதன் காரணமாக இன்று சில பகுதிகளில் பேக்கரி பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும், நாட்டின் சில பகுதிகளில் உள்ள பேக்கரிகள் இன்று முதல் குறைந்த விலையில் பொருட்களை விற்பனை செய்திருந்தன.

குறைக்கப்பட்ட ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை கடையில் காட்சிப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அவ்வாறு செய்யாத விற்பனை நிலையங்களுக்கு எதிராக இன்று முதல் சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles